ETV Bharat / state

காதலுக்கு எதிர்ப்பு! தாயே மகளை கொளுத்திய கொடூரம்! - mother fired daughter

நாகப்பட்டினம்: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்

எரித்துக் கொல்லப்பட்ட ஜனனி
author img

By

Published : Nov 21, 2019, 6:29 PM IST

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், உமா மகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜ‌னனி. பதினொன்றாம் வகுப்பு இடைநின்று வீட்டிலிருந்த ஜன‌னி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ராஜ் குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இரண்டு முறை வீட்டை விட்டு வெளியேறிய ஜன‌னி,18 வயது பூர்த்தி ஆகாத‌தால், திருமணம் செய்து கொள்ள முடியாத‌ நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோரால் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜ‌ன‌னிக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் நான்கு நாட்களே மீதமிருக்கும் நிலையில், அதன்பின் காதலன் ராஜ்குமாருடன் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்த‌து தெரிய வந்த‌தால், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற தாய் உமா மகேஸ்வரி பெற்ற மகள் என்றும் பாராமல், மண்ணெண்ணையை ஊற்றி ஜன‌னியை கொளுத்தியுள்ளார்.

பின்னர் அவரும் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. இந்த ஆணவ வெறியாட்டத்தில் ஜன‌னியின் உயிர் பிரிந்த‌து. தாய் உமா மகேஸ்வரிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Intro:நாகை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் ; காதலித்த மகளுக்கு 18வயது பூர்த்தியடைய 4நாட்களே இருக்கும் நிலையில் உயிரோடு கொளுத்திய கொடூரம்:-Body:நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் உமா மகேஸ்வரி தம்பதியினரின் 17 வயதான மகள் ஜனனி. பள்ளிக்கூடம் படித்து வந்த ஜனனிக்கும் அதே பகுதியை சேர்ந்த 22வயதான ராஜ்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான காதலுக்கு ஜனனி வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, 18வயது பூர்த்தி அடையாத திருமணம் செய்துகொண்டால் சிக்கல் என்று தெரிந்துகொண்ட ராஜ்குமார் வழக்கறிஞர் உதவியுடன் மயிலாடுதுறையில் உள்ள விடுதி (ஹாஸ்டல்) ஒன்றில் சேர்த்துள்ளார். இந்த விஷயம் அறிந்த ஜனனியின் பெற்றோர் மயிலாடுதுறை விடுதியில் இருந்த தங்களது மகள் ஜனனியை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர், ஜனனிக்கு அவரது பெற்றோர்கள் வேறு ஒருவரோடு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த ராஜ்குமார் ஜனனியை வரவழைத்து காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனை அறிந்த ஜனனியின் தாய் உமா மகேஸ்வரி திருநள்ளார் காவல் நிலையத்தில் தனது மகளை ராஜ்குமார் கடத்தி விட்டதாக புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற திருநள்ளாறு போலீசார் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரையும் பிரித்துவைத்து பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஜனனிக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் திருமணம் செய்து கொள்ள ராஜ்குமார் காத்திருந்த நிலையில், இன்னும் 18 வயது முடிய 4 நாட்களே இருக்கும் நிலையில் தனது தாயாரால் ஜனனி கொளுத்தப்பட்டு, அவரும்கொளுத்திக்கொண்டு இருவரும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜனனியும் ராஜ்குமாரும் வாழ்மங்கலத்தில் உள்ள வயல்வெளிகளில் சந்தித்து பேசிக் கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்து ஜனனியின் தாய் உமாமகேஸ்வரியிடம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு கண்ணன் இரவு வேலைக்கு சென்றபிறகு , கண்ணனின் இளைய மகன் அருண் வீட்டு திண்ணையில் படுத்து உறங்கி உள்ளார். கூரை வீட்டின் உள்புறம் ஜனனியும், தாய் உமாமகேஸ்வரியும் தூங்கும்போது, ஜனனி ராஜ்குமாரிடம் பழகியது தொடர்பாக கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே அதிகாலை 04.30 மணியளவில் உமாமகேஸ்வரி ஜனனி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது மட்டுமல்லாமல், மண்ணெண்ணெயை தனக்குத்தானே ஊற்றிக்கொண்டு தானும் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். அலறல் சத்தம் கேட்கவே வாழ்மங்கலம் சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த போலீசார் 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்து இருவரையும் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் உமா மகேஸ்வரிக்கு 100 சதவீத தீக்காயமும், ஜனனிக்கு 95% தீக்காயத்துடனும் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிருக்கு போராடி வரும் இருவரிடமும் நாகை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மரண வாக்குமூலம் வாங்கினார். அதனை தொடர்ந்து ஜனனியின் தாயான உமாமகேஸ்வரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த திட்டச்சேரி போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜனனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.