மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் மனிதநேய மக்கள் கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயிர்கொல்லிகளாக மாறி வரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வை நடத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக உரிமை இயக்கம், திராவிடர் கழகம், தமிழ் தேசிய முன்னணி, மக்கள் அரசு கட்சி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.