மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 3 நாள் கைத்தறி கண்காட்சி நடத்தப்படுகிறது. நேற்று (ஜனவரி 9) தொடங்கிய கண்காட்சியை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்துவைத்து பார்வையிட்டார்.
அதன்பின் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் செய்தியாளர்களிடம் கூறும்போது, நெசவாளர்களை பாதுகாக்க நாம் அனைவரும் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும். தருமபுரம் ஆதீனத்தில் 3,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். அவர் திறந்து வைக்க வருவதாக தெரிவித்தார். இக்கல்லூரியின் 25ஆம் ஆண்டு விழாவில் கலைஞர் கருணாநிதி, 50ஆம் ஆண்டு விழாவில், அப்போதைய அமைச்சர்கள் க.அன்பழகன், கோ.சி.மணி ஆகியோர் கலந்து கொண்டனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்.இ.சி.எல் நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கப்பணிகளை தடுக்க வேண்டும் - பேராசிரியர் ஜெயராமன்