ETV Bharat / state

புதிய கரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் - Mayiladuthurai latest news

மயிலாடுதுறை: 120 படுக்கை வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கரோனா சிகிச்சை மையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்துவைத்தார்.

புதிய கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

author img

By

Published : Jun 6, 2021, 10:07 AM IST

மயிலாடுதுறையில் கரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் தினசரி சராசரியாக 700 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதேபோல், தொற்று பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அந்தவகையில், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 120 படுக்கை வசதியுடன் புதிதாக கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மையத்தை சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கைகளால் கரோனா தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியுள்ளது.

தொற்றினை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் 120 படுக்கைகள் கொண்ட புதிய கரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில், சிகிச்சைப் பெறுபவர்களுக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வருவதைத் தவிர்த்திட வேண்டும்.

கரோனா தொற்று ஏற்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்திவைப்பதைத் தவிர்ப்பதற்காகவே கரோனா சிறப்பு மையங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா பரிசோதனை முடிவுகள் காலதாமதம் ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு, கரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. சந்தேகம் ஏற்பட்டால் பரிசோதனை செய்து முடிவை தெரிந்துகொள்ளுங்கள் எனக் கூறினார்.

புதிய கரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குளத்தில் அனுமதியின்றி மண் எடுத்த 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.