நாகப்பட்டினம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மத்தியில் நிலவிவருவதால் தமிழ்நாட்டில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், "அதிமுக 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்ற சரித்திரத்தை பெற்றுள்ளது. 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளோம்.
அதிமுக தற்போது இரட்டைத் தலைமையோடு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கழகத்தின் நான்கு சுவர்களுக்குள் முடிவு எடுக்கப்படும். இதற்காக அதிமுகவில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை" என்று பேசினார்.
இதையும் படிங்க: ’நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன்’ - ஓபிஎஸ் பகீர்!