நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம், விழுந்தமாவடி ஆகிய பகுதிகளில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதாபராமபுரம், விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த மாற்று கட்சியில் இருந்து விலகி 500 க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், "நீட் தேர்வு தொடங்கப்பட்ட நாள்முதல் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என நம்புகிறேன். மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இட ஒதுகீடு பிரச்சினையில் எந்த ஒரு சமரசமும் யாரோடும் எந்த ஒரு காலத்திலும் கிடையாது” எனக் கூறினார்.
“இட ஒதுக்கீடு விவகாரத்தில் சமரசம் கிடையாது”- அமைச்சர் ஓ.எஸ். மணியன் - அமைச்சர் ஓ எஸ் மணியன்
நாகப்பட்டினம்: இட ஒதுக்கீடு விவகாரத்தில் யாரோடும் எந்த ஒரு காலத்திலும் சமரசம் கிடையாது என அமைச்சர் ஓ. எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.