ஊரடங்கு உத்தரவை மக்கள் எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் என்பது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாகையில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை, வெளிநாடுகளில் இருந்து நாகை திரும்பி தீவிர வீட்டுக் கண்காணிப்பில் இருந்த 520 நபர்களில் 70 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 450 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
அத்தியாவசிய பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் தேவையற்ற பயணம் மேற்கொண்டால் காவல்துறை மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஏற்கனவே நாகையைச் சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா அறிகுறி இருந்த நிலையில், அவர்களில் மூவருக்கு நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒருவருக்கு முடிவு வரவில்லை.
நாகையில் 140 படுக்கைகள், மயிலாடுதுறையில் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தயாராக உள்ளது. ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க... 'தங்கள் நலன் காக்க ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவும்' - திண்டுக்கல் ஆட்சியர்!