ETV Bharat / state

‘தமிழ்நாட்டில் 25 இடங்களில் புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி’ - அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் - மணல் குவாரிகள் திறப்பு

கட்டுமானபணிகளுக்கு மணல் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சட்டசபையில் தெரிவித்ததால் தமிழகத்தில் 25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது என அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

author img

By

Published : May 7, 2023, 8:47 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

நாகப்பட்டினம்: தமிழ்நாடு முதலமைச்சரின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் வெளியீட்டுவிழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 382 பயனாளிகளுக்கு ரூ.6.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கூறுகையில், “திமுக ஆட்சி அமைந்தபிறகு ரூ.114 கோடி மதிப்பீட்டில் 7 மாடிகொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ரூ. 24 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ. 46 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பூம்புகார் சுற்றுலாமையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் அலக்குடி பகுதியில் கரையை பலப்படுத்தும் பணிகளும், புயல்பாதுகாப்பு மையம் அமைகப்படவுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அனைத்து வசதிகளும் மேம்படுத்திகொடுக்கப்படும். புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை நகரில் பாதாளசாக்கடை பிரச்னை தீர்வுகான வேண்டியுள்ளது. ரூ. 99 கோடி திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாதாளசாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் தற்போது பிரச்னையாக உள்ளது. அதனை விரைவில் சீரமைத்து பாதாளசாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகானப்படும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, “கட்டுமானபணிகளுக்கு மணல் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சட்டப்பேரவையில் தெரிவித்ததால் தமிழ்நாட்டில் 25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்த மணல் அவசியம் தேவைப்படுவதால் அதனடிப்படையில் தேவைக்கு ஏற்ப பொதுப்பணித்துறை மூலமாகத்தான் மணல்குவாரிகள் திறக்கபட உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: திராவிட மாடல் கொள்கை கற்பனையானது - ஹெச்.ராஜா விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.