ETV Bharat / state

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக முதலமைச்சர் ஸ்டாலின் விளங்குகிறார்- அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

ஒற்றை தலைமையாக இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என்று சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Minister Meyyanathan says proudly about cm Stalin guide for India development  ஒற்றை தலைமையாக இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார்
இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக ஸ்டாலின் விளங்குகிறார் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
author img

By

Published : Jun 6, 2022, 9:36 AM IST

மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் திறப்பு விழாவில் சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு தனியார் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர் கேரளாவில் நடைபெற்ற 19 வயதுக்குப்பட்டோருக்கான தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தமிழ்நாடு அணியில் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்ந்து, அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி அமைச்சர் பேசுகையில், "இன்று இந்தியாவின் ஜனநாயகத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் பெரும் தீங்கு மற்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமையாக இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகத் திராவிடன் மாடல் ஆட்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விளங்குகிறார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக ஸ்டாலின் விளங்குகிறார் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நேர்மையாக உழைத்து வருகிறார். எளிமையாக அனைவரிடம் கருத்துக்களைக் கேட்டு ஒரு கொள்கையின் தடம் மாறாத தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். 8 வருடமாக உள்ள மத்திய அரசு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரின் நடவடிக்கையை இந்தியா முழுவதும் பிரதிபலிக்கிறது.

பாஜக தலைவர்கள் கூட நம் முதல்வரைப் பற்றி பெருமையாக பேசும் நிலைக்கு நாம் உயர்ந்து இருக்கின்றோம். தமிழன் என்று தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்றால் அதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவருடைய நேர்மையான ஆட்சியும்தான் என்றார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி வழியில் திசை மாறாத தலைவராக தற்போது ஸ்டாலின் நிற்கிறார்" என்று பேசினார்.

இதையும் படிங்க: 'ஏய் அடிப்பேன், என்னப் பிரச்சினை, என்ன நடக்குது'- அமைச்சர் தா.மோ. அன்பரசன்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.