நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 250 மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
விழா அரங்கிற்குள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நுழைந்த போது, மாணவர்கள் எழுந்து நிற்காததால் அவர் அதிருப்தியடைந்தார்.
பினன்ர், மாணவர்களிடம் பேசிய அமைச்சர், அதிகாரிகள் வந்தால் எழுந்து நிற்க வேண்டும் என தெரியாதா? என கேள்வி எழுப்பினார். பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்து விழுப்புணர்வு நிகழ்ச்சி!