ETV Bharat / state

தூத்துக்குடி சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா? - அமைச்சர் எ.வ.வேலு கேள்வி - Mayiladuthurai news

அதிமுக ஆட்சியில் எத்தனையோ இறப்புகள் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

தூத்துக்குடி சம்பவத்திற்கு ஈபிஎஸ் ராஜினாமா செய்தாரா? - அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

author img

By

Published : May 17, 2023, 7:43 AM IST

அமைச்சர் எ.வ.வேலு மேடைப்பேச்சு

மயிலாடுதுறை: திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவில், மயிலாடுதுறை நகர திமுக சார்பில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு, “கோயிலில் கட்டடம் முதல் கலசம் வரை அனைத்தையும் நம்மவர்கள் தான் கட்டுகிறார்கள். தமிழைப் பற்றித் தெரியாதவர்கள் மற்றும் இனம் புரியாதவர்கள் கோயிலில் யாகசாலை அமைத்து, 48 நாட்கள் நமக்கே புரியாதவற்றை எல்லாம் சமஸ்கிருதத்தில் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள கடவுள்களுக்கு தமிழ் தானே பிடிக்கும், சமஸ்கிருதமா பிடிக்கும்? சமஸ்கிருதத்தில் கடவுளிடம் ஏதேதோ சொல்லி, கடைசியில் கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்தைச் செய்த நபர்களையே தொட்டுப் பார்க்க விடாமல், அதன் மீது தண்ணீரைக் கூட அவர்கள்தான் ஊற்றுகிறார்கள்.

அந்த தண்ணீரை அனைவரும் ஊற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தினை திராவிட மாடல் அரசு கொண்டு வந்தது. ஆகம விதிகளை நானும் படித்துதான் வந்துள்ளேன். எந்த ஆகம விதிப்படி, டிக்கெட் கொடுத்தால்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என உள்ளது?

பெயர், குலம் மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றைக் கேட்டு அர்ச்சனை செய்வது எந்த ஆகம விதியிலும் இல்லை. இவை அனைத்தும் சுயநலத்திற்காகச் செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

ஆனால், நீங்கள் தான் (எடப்பாடி பழனிசாமி) எங்களுக்கு ஓட்டு போட்டீர்களா? தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததற்காக எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா? அதிமுக ஆட்சிக் காலத்தில் எத்தனையோ இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?

ஜெயலலிதா ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்பட்ட போது, ஜெயலலிதா ஆட்சியை ராஜினாமா செய்தார்களா? எங்கள் ஆட்சியில் நடந்தது தவறுதான். அதை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. காவல் துறை மற்றும் அதிகாரிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரத்துடன் பேச வேண்டும். விபத்தின் காரணமாகத் தான் நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் என்ற தரத்தில் பொது வெளியிலிருந்ததை ஒரு போதும் மறக்க வேண்டாம். உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும் என ஆசையா? அதற்குள் என்ன அவசரம்?

எங்களுடைய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி, நாங்கள் அளித்த தேர்தல் அறிக்கையை மறுபதிப்பாகக் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அறிக்கையாக அளித்து ஆட்சியைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது என்று சொன்னால், அடுத்து வரும் 2024 தேர்தலில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "கள்ளச்சாராயம் குடித்தால் 10 லட்சமாம்.. சீமான் கேள்வி..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.