மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தின நள்ளிரவில், அகில இந்திய அளவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக பல்வேறு மாற்றுத்திறனாளிகள் உரிமை அமைப்புகள் முன்னதாக அறிவித்திருந்தன.
அதன்படி நாகை அனைத்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அரசியல் சாசன உறுதிமொழி ஏற்றனர். அதில், தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்க நாகை மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'பேரிடர்களை சமாளிக்க' - உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா!