நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் மூக்கையன் மகன் மணிகண்டன்(26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்குமிடையே டிரம்செட் வாசிப்பது, பன்றி வளர்த்து விற்பனை செய்வதில் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு மணிகண்டன், ரத்தினம் நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்து முனுசாமி, வீரைய்யன், ரங்கசாமி, பெரியண்ணன் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துறை ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் முனுசாமி, வீரைய்யன், ரங்கசாமி, பெரியண்ணன் ஆகியோர் சரணடைந்தனர்.
அதனையடுத்து மயிலாடுதுறை காவல் துறையினர் முனுசாமி உள்ளிட்ட நான்கு பேரையும் மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரிஷ்வானா பர்வீன் முன்னிலையில் ஆஜர்படுத்தி ஒருநாள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதிபெற்றனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் துறையினர் நான்கு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!