வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள பரமேஸ்வரமங்கலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (21). இவருக்கு மயிலாடுதுறையில் உள்ள 16 வயது சிறுமியுடன் தடைசெய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் சிறுமியுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி, ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போகியுள்ளார். பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதுகுறித்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் காவல் துறையினரின் விசாரணையில் அரக்கோணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மயிலாடுதுறைக்கு வந்து அந்த சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை ஏமாற்றி கடத்தியதாக இளைஞர்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தார்.
இந்நிலையில் அரக்கோணத்தில் வைத்து காவல் துறையினர் சிறுமியை மீட்டுள்ளனர். இருப்பினும் சிறுமியை கடத்திச் சென்ற சஞ்சய்குமார், அவரது நண்பரை தேடி வந்தனர்.
ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு சஞ்சய்குமாரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இன்று (ஆகஸ்ட் 12) நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள சஞ்சய்குமாரின் நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிபிஐ அலுவலர்கள் போல் நடித்து நகைகள் கொள்ளை: காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் 6 பேர் சிக்கினர்!