ETV Bharat / state

வைத்தீஸ்வரன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு - வைத்தீஸ்வரன் கோயில் ஆனி மாத கிருத்திகை வழிபாடு

மயிலாடுதுறை வைத்தியநாதசுவாமி கோயிலில் ஆனி மாத கிருத்திகை வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

வைத்தீஸ்வரன் கோயில் ஆனி மாத கிருத்திகை வழிபாடு

author img

By

Published : Jun 26, 2022, 9:43 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் இன்று (ஜூன் 26) ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளிய செல்வமுத்துக்குமார சாமிக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் முதலான 51 வகை நறுமண திரவியப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை நடைபெற்று மகா தீபம் காட்டப்பட்டது.

இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.