மயிலாடுதுறை: தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அரவை பருவம் நிறுத்தப்பட்டது. ஆலையில் பணியாற்றிய பெரும்பாலான ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதில் 125 நபர்களுக்கு 28 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஆலையின் உள்ளே 15-வது நாளாக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அலுவலர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையும் படிங்க: ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கடும் வெள்ளத்திலும் கட்டிங் போட்ட குடிமகன்கள்!