ETV Bharat / state

மயிலாடுதுறை திடீர் மழையால் அச்சத்தில் விவசாயிகள்! - மயிலாடுதுறை திடீர் மழையால் அச்சத்தில் விவசாயிகள்

மயிலாடுதுறையில் காலை முதல் பெய்து வரும் திடீர் மழையால் நெல் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை திடீர் மழையால் அச்சத்தில் விவசாயிகள்!

author img

By

Published : Feb 11, 2022, 11:05 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று(பிப்ரவரி 11) காலை தொடங்கி மழை பெய்து வருகிறது.

மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை லேசான மழையாகத் தொடங்கி தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

காலை 7 மணிக்கு பின்னரே பலத்த மழை தொடங்கியதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. சில இடங்களில் சம்பா பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், பலத்த மழை தொடர்ந்தால் பயிர்கள் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது.

இதேபோல பல்வேறு இடங்களில் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்மணிகளை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கு திடீரென பெய்யும் இந்த மழை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை திடீர் மழையால் அச்சத்தில் விவசாயிகள்!

இதையும் படிங்க:விஸ்வரூபம் எடுக்கும் விசைப்படகு ஏலம்: நாகை மீனவர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.