மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த பூம்புகாரில் கடந்த 2003ஆம் ஆண்டு பயிற்சி முடித்த, காவலர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூன்12) நடைபெற்றது. நாகப்பட்டினத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், கடந்த 2003ஆம் ஆண்டு பயிற்சி முடித்த காவலர்கள், இதே ஆண்டு ஏனைய பிற பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பலரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.
அவ்வாறு மாவட்டத்தில் பயிற்சி பெற்ற காவலர்களின் பணிக்காலம் 20 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் காவலர்கள் என அனைவரும் பூம்புகாரில் ஒன்றிணைந்து தங்களது எண்ணங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பூம்புகார் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை காவலர் பயிற்சிப் பள்ளியின் முன்னாள் பயிற்றுநர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதுடன் காவலர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினர். முன்னதாக, 2003ஆம் ஆண்டு பயிற்சி முடித்து பணியில் இருந்து உயிரிழந்த சக காவலர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ’விரைவில் சிலம்பமும் ஒலிம்பிக்ஸில் சேரும்..!’ - சிலம்பாட்ட சங்க மாநிலத் தலைவர்!