ETV Bharat / state

'கடலைப் பார்த்தாலே பயமாக உள்ளது...' தாக்குதலுக்குள்ளான மயிலாடுதுறை மீனவர்கள் வேதனை - indian navy attacks fishermen

ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்கச்சென்றபோது கடற்படை நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த மயிலாடுதுறை மீனவர்கள் தங்களை தாக்கிய பிறகு, தற்போது கடலை பார்த்தாலே பயமாக உள்ளது என வேதனைத் தெரிவித்துள்ளனர்.

கடற்படை தாக்குதல் நடத்திய மயிலாடுதுறை மீனவர்கள் வேதனை

author img

By

Published : Oct 28, 2022, 10:52 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வானகிரி கிராமத்தைச்சேர்ந்த மீனவர் வீரவேல். கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படையினரால் சுடப்பட்டு, பலத்த காயமடைந்து மதுரையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவருடன் மீன் பிடிக்கச்சென்று காயமடைந்த வானகிரியைச்சேர்ந்த சக மீனவர்களான செல்வகுமார், சுரேஷ், செல்லதுரை, மோகன்ராஜ் உள்ளிட்ட மீனவர்கள்; சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர்.

அந்த மீனவர்களிடம் சம்பவம் குறித்தும், அவர்களது கருத்து மற்றும் கோரிக்கை குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது மீனவர்கள் இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்; தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.

'கடலைப் பார்த்தாலே பயமாக உள்ளது...' தாக்குதலுக்குள்ளான மயிலாடுதுறை மீனவர்கள் வேதனை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர் செல்வகுமார் கூறுகையில், ”இந்திய கடற்படையினரே இந்திய மீனவர்களான எங்களை தாக்கியது வேதனை அளிக்கிறது. அவர்கள் எங்களைத்தாக்கிய பிறகு தற்போது கடலைப் பார்த்தாலே பயமாக உள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. தமிழ்நாடு அரசு இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: பணம் பறித்துக்கொண்டு கைவிட்ட உறவினர் - பார்வையற்ற மூதாட்டியிக்கு ஆதரவளித்த ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.