ETV Bharat / state

'நூறாண்டுகள் ஆகியும் உழவர்களின் நிலைமை மாறவில்லை' - காந்தி சிலையிடம் முறையிட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை: நூறு ஆண்டுகள் ஆகியும் உழவர்களின் நிலைமை மாறவில்லை எனக் கூறி உழவர்கள் அரை ஆடை அணிந்து மகாத்மா காந்தி சிலையின் முன்நின்று முறையிட்டு மாலை அணிவித்தனர்.

Gandhi
Gandhi
author img

By

Published : Sep 23, 2021, 7:44 AM IST

மதுரைக்கு 1921 செப்டம்பர் 22ஆம் தேதி வந்த மகாத்மா காந்தி உழவர்கள் அரை ஆடை அணிந்திருப்பதைப் பார்த்து, இந்தியாவின் கடைசி உழவன் எப்போது முழுமையாக ஆடை அணிகிறானோ அதுவரை தானும் முழு ஆடை அணியப் போவதில்லை என்று கூறி அரை ஆடைக்கு மாறினார்.

பின்னர் அதுவே காந்தியின் அடையாளமாக மாறியது. இந்த நிகழ்வு நடந்து நேற்றுடன் (செப். 22) 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில் மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் கடந்தும் உழவர்களின் நிலைமை இன்னும் மாறவில்லை; அப்படியேதான் இருக்கின்றது எனக் கூறி, காந்தியின் முழு உருவச் சிலைக்குச் சட்டையில்லாமல் அரை ஆடையுடன் உழவர்கள் மாலை அணிவித்து முறையிட்டனர்.

காந்தி சிலையிடம் முறையிட்ட உழவர்கள்

இயற்கை உழவன் மாப்படுகை ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகம் பங்கேற்று காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து உழவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: காந்தி அருங்காட்சியகம் சீரமைப்பு - காந்தியின் பேத்தி வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.