நாகை மாவட்டம் சீனுவாசபுரத்தில் வசிப்பவர் அசோகன். இவர் ஓமன் மன்னர் சுல்தான் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது வீட்டின் அருகில் பேனர் ஒன்றை வைத்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், தன் குடும்பத்தினருடன் 1997 முதல் 2008 வரை ஓமன் நாட்டில் பணி நிமித்தமாக வசித்து வந்ததாகவும் பின்னர் மயிலாடுதுறையில் அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்ததால் சொந்த ஊருக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 10ஆம் தேதி ஓமன் நாட்டு மன்னர் சுல்தான் காபூல் பின் சயித் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பதை அறிந்தவுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே பேனர் வைத்து மலரஞ்சலி செலுத்தினோம் என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும், ஓமன் நாட்டில் வசித்தபோது ஜாதிமத பாகுபாடின்றி அனைத்து வசதிகளையும் பெற்றதாகவும், சுகாதாரம் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஒமன் நாட்டில் வசிப்பவர்களுக்கு கிடைப்பது போன்று தன் குடும்பத்தினரும் பெற்றதாகவும் கூறிய அசோகன், அந்த மன்னரின் கொள்கைகள் அந்நாட்டை முன்னேற்றியதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
சொந்த மாவட்டத்தில் மேயர் பதவியைப் பிடிக்க முதலமைச்சர் போட்ட 'ஸ்கெட்ச்'