மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, முருகமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை காரிப்பருவம் முடிவடைந்து விலையேற்றத்துடன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முருகமங்கலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நெல் மூட்டைகள் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. இடவசதி இல்லாத நிலையில், நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தொடாந்து, தற்போது பெய்து வரும் மழையில் மூட்டைகள் நனைந்த நிலையில், நெல் மூட்டைகளை தார்ப்பாயால் போர்த்தி பாதுகாத்து வரும் விவசாயிகள் உடனடியாக எஞ்சியுள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...பட்டினியால் வாடும் இந்தியா - உலக பட்டினி அட்டவணை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்