திமுக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழகம் திட்டப்பணியை தொடங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வன உயிரினக்கோட்டம் சீர்காழி வனச்சரகத்திற்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி பிரிவுகளில் திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதாமுருகன் (பூம்புகார்), பன்னீர்செல்வம் (சீர்காழி), ராஜகுமார் (மயிலாடுதுறை), மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில், வன விரிவாக்க அலுவலர் சேகர், வனச்சரக அலுவலர் குமரேசன், திமுக கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.