கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதை முன்னிட்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும் விநாயகர் ஊர்வலத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது மற்ற இடங்களை போல மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்துவருபவர்கள் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்கூட்டியே அட்வான்ஸ் தொகை வாங்கி சிலை செய்துள்ள வியாபாரிகள், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைக்கும்போது தண்ணீரை மாசுப்படுத்தாமல் இருக்க சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்படி காதிக்கூழ், கிழங்கு மாவினால் தயாரிக்கப்பட்டுள்ள சிலைகள் இந்த ஆண்டு விற்பனையாக வில்லை என்றால் அவற்றை இருப்பு வைத்திருக்க இயலாது, அவைகள் தானாகவே செரித்துவிடும் தன்மை வாய்ந்தது. பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிசில் தயாரித்தால் பத்து ஆண்டுகள் ஆனாலும் அழிந்துபோகாது.
சுற்றுச்சுழல் வழிகாட்டுதலின் படி சிலைகள் தயார் செய்தவர்கள், செய்வதறியாமல் தவித்துவருகின்றனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் காவல்துறையினர், மயிலாடுதுறை அருகே சிபுலியூரில் கோயில் முன்பாக ஒன்பது அடி சிலை, கடலங்குடியில் ஆறு அடி உயர சிலை வைத்திருந்த மூன்று பேர் மீது மணல்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக சிலைகள் அகற்றப்பட்டு அவரவர்களது வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை கடைவீதியில் குறைந்த உயரங்கொண்ட சிலைகள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பொதுவெளியில் விநாயகரை வழிபட அரசு அனுமதிக்க வேண்டும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்