நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பெரியார் அரசு மருத்துவமனை உள்ளது. இதில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புறநோயாளிகளாகவும், மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவு, ஆண்கள் சிகிச்சை பிரிவு, தீவிர காய்ச்சல் பிரிவு போன்ற இடங்களில் மின்விளக்குகள், மின் விசிறிகள் ஆகியன பல்வேறு இடங்களில் சரிவர இயங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தத் தகவலறிந்து நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்ற மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், மின்விளக்குகள், மின்விசிறிகள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, செயல்படாத மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை தனது சொந்த செலவில் சரிசெய்து தருவதாக மருத்துவமனை நிர்வாகிகளிடம் உறுதியளித்துச் சென்றார்.