நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. இந்தக் கூட்டமானது நாகை வடக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
இதில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகஎம்.ரிபாயுதீன் அறிமுகப்படுத்தப்பட்டார். இதையடுத்து ஏற்புரை வழங்கி பேசிய அவர், மயிலாடுதுறையில் பல ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத திட்டங்களையும், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள குறைகளையும் கண்டறிந்து நிறைவேற்றுவதாகத்வாக்குறுதியளித்தார்.