நாகை மாவட்டம் சோழம்பேட்டை ஊராட்சியில் உள்ள வானமுட்டி பெருமாள் கோயில் குளத்தில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ள அனுமதித்த அரசு அலுவலர்களை கைது செய்யக்கோரியும், குளத்தில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரியும் மாப்படுகை அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டச் செயலாளர் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு அனுமதி பெற்று விதிமுறைக்கு மாறாக மணல் அள்ளியதால் குளத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மேலும் சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ளுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக கையூட்டுப் பெற்ற வருவாய்த் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
இதையும் படிங்க: சாலைகளை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டம்!