தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் காலை முதலே பொதுமக்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்கினை செலுத்திவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் மயிலாடுதுறையில் டிஎல்சி பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, காலை முதலே வாக்குப்பதிவு அமைதியாகவும், வேகமாகவும் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்தத் தொகுதியில் யார் வெல்வார் என்பது அனைவருக்கும் தெரியும். நிச்சயம் உதயசூரியன் வெற்றிபெறும். ஜனநாயகக் கடமையை மக்கள் சிறப்பாக நிறைவேற்றுகின்றனர் என தெரிவித்தார்.