மயிலாடுதுறை: சீர்காழி அருகே புகழ்பெற்ற செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்காள மாநில பொறுப்பு ஆளுனருமான இல.கணேசன் தனது சகோதரர் கோபாலன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி சன்னதி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக கோயிலுக்கு வருகை புரிந்த ஆளுநர் இல.கணேசனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநர் இல.கணேசனுக்கு கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை , வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் வருகையை ஒட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் காவல் துணைகண்காணிப்பாளர் லாமெக் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: முதலில் கலப்படம் இல்லாத பால் கொடுங்க: தமிழக அரசை விளாசிய கிருஷ்ணசாமி!