மயிலாடுதுறையில் காமராஜர் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் காய்கறி சந்தை; ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் உணவு தயார் செய்யும் பணி ஆகியவற்றை தஞ்சை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், அப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு அவர் உணவு பொட்டலங்களை வழங்கினார். தொடர்ந்து மயிலாடுதுறை, பிஎன்டி நகரில் கரோனா நோய்த்தொற்று பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட உமா மகேஸ்வரி, பொதுமக்களிடம் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும்; முகக் கவசங்கள் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படியும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் கரோனா ஓவியம்: தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் விழிப்புணர்வு