ETV Bharat / state

நிர்வாக வசதிக்காக மயிலாடுதுறையை பிரிப்பது நல்லது: ஆதினம் அறிவுரை - ஆதினம் பேட்டி

நாகப்பட்டினம்: நிர்வாக வசதிக்காக நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிப்பது நல்லது என்று தருமபுரம் ஆதினம் அறிவுரை வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறை
author img

By

Published : Jul 26, 2019, 9:48 PM IST

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறை கோட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தனி மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக முற்றுகை போராட்டம், தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் ஆகிய பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.

ஆதினம் பேட்டி

அந்த வகையில், மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாக வசதிக்காக மாவட்டத்தைப் பிரிப்பது நல்லது என்றும், மாவட்டத்தைப் பிரித்த பின்னர் மாவட்ட வளர்ச்சிக்காக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Intro:நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை பிரிப்பது நல்லது. மயிலாடுதுறை தனி மாவட்டம் கோரிக்கை குறித்து தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் பேட்டி:-Body:மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறை கோட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தனி மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம், தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் ஆகிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதற்கு, தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் அருளாசி கூறி கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிர்வாக வசதிக்காக மாவட்டத்தைப் பிரிப்பது நல்லது. மாவட்டத்தை பிரித்தால் மக்களுக்கு சௌகரியமாக இருக்கும். மாவட்டத்தை பிரித்த பின்னரும் மக்கள் அனைவரும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, ஆதீன கண்காணிப்பாளர் மோகன் கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்தை பதிவுசெய்தார்.

பேட்டி : ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.