ETV Bharat / state

முகக்கவச உற்பத்தி, விற்பனையின் தற்போதைய நிலை என்ன?

ஆரம்பத்தில் அதிகமாக முகக்கவசங்கள் விற்பனையான நிலையில், தற்போது முகக்கவசங்களின் விற்பனை எவ்வாறு இருக்ககிறது என முகக்கவச உற்பத்தியாளர் கூறுவதை இத்தொகுப்பில் பாருங்கள்..

author img

By

Published : Oct 18, 2020, 11:00 PM IST

mayiladurai msak production
முகக்கவச உற்பத்தி, விற்பனையின் தற்போதைய நிலை என்ன?

நாகப்பட்டினம்: கரோனா பொது முடக்க காலத்தில் பல தொழில்கள் முடங்கிய நிலையில், முகக்கவசங்கள் தயாரிக்கும் தொழில் மட்டும் சிறப்பாக நடைபெற்று வந்தது. முகக்கவசங்களுக்கான தேவை கூடுதலாக இருந்ததாலும், இந்தியாவில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாலும், பல முகக்கவசங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த கரோனா காலகட்டத்தில் உருவாகின.

அதுபோல, மயிலாடுதுறையில் உருவான நிறுவனம்தான் ஏஜிஎன் சொல்யூஷன்ஸ். நடவு இயந்திர விற்பனையில் ஈடுபட்டுவந்த இந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ், கரோனா உச்சத்தில் இருந்தபோது வெளிநாட்டில் வசிக்கும் தனது நண்பருக்கு அனுப்புவதற்காக என்- 95 ரக முகக்கவசம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதும் முகக்கவசங்களுக்கு நாடுமுழுவதும் தட்டுப்பாடு நிலவியதும் இவருக்கு தெரியவர குறைந்த விலையிலும், தரமாகவும் முகக்கவசங்களை தயாரித்து விற்கவேண்டும் என்ற சிந்தனை அவருக்கு உதித்துள்ளது.

முகக்கவச உற்பத்தி, விற்பனையின் தற்போதைய நிலை என்ன

இதைத்தொடர்ந்து ஏஜிஎன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் என்- 95 ரக பாதுகாப்பு முகக்கவசத்தை தயாரித்து விற்பனை செய்துவருகிறார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ். முதலில், முகக்கவசங்கள் தயாரிப்பது குறித்து எவ்வித அனுபவமும் இல்லாமல் இருந்த இவர், சமூக வலைதலப் பக்கங்களை ஆராய்ந்து முகக்கவசத் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு முகக்கவசம் தயாரிப்பினை தொடங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் வியாபாரம் சூடுபிடித்த நிலையில், தற்போது முகக்கவசங்களின் உற்பத்தியளவு குறைந்துள்ளது. அதற்கு மக்களிடையே விழிப்புணர்வு குறைந்ததே காரணம் என்கிறார் ஏஜிஎன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ்.

mayiladurai msak production
முகக்கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பெண்கள்

ஒரு முகக்கவசம் தயாரிக்க ரூ. 30 செலவாகும் நிலையில், மருத்துவமனை, மருந்தகங்களுக்கு ஒரு முகக்கவசத்தை ரூ. 35க்கும், தனியாருக்கு ரூ. 40க்கும் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக இரண்டு ஷிப்டுகளாக இயங்கிவரும் இந்நிறுவனம் 12 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது.

கரோனா ஊரடங்கு அமல்படுத்திய சமயத்தில் நாளொன்றுக்கு 3,000 முகக்கவசங்களைத் தயாரித்து வந்த இந்நிறுவனம், தற்போது 1,000 முகக்கவசங்களை மட்டுமே உற்பத்தி செய்துவருகிறது.

இதையும் படிங்க: சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள மூலிகை ப்ளூடூத் முகக்கவசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.