ETV Bharat / state

பாதுகாப்பு வேண்டும்- காதல் ஜோடிகள் காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு - parents

நாமக்கல்: காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கோரி காதல் ஜோடிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

ஸ்ரீனிவாசன்-கவுரி
author img

By

Published : May 18, 2019, 4:26 PM IST

நாமக்கல் மாவட்டம், வையப்பமலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த கௌரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்துகொண்டனர். மேலும் பெற்றோர்கள் மூலம் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்புக் கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆண்டலூர் கேட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரும் அதேபகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டாருக்கும் தெரியவந்ததால், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்த பெற்றோர்கள் இருவரையும் மிரட்டியதால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இரண்டு ஜோடிகளின் மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

lovers
கிருஷ்ணமூர்த்தி-பிரியதர்ஷினி

ஒரே நாளில் இரண்டு காதல்ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமைடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் இருதினங்களுக்கு முன்பு பாதுகாப்பு கேட்டு நான்கு காதல் ஜோடிகள் தஞ்சம் புகுந்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Intro:காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்கள் எதிர்ப்பு ! பாதுகாப்பு கோரி எஸ்பி யிடம் தஞ்சம் புகுந்த நான்கு காதல் ஜோடிகள்

Body: நாமக்கல் வையப்பமலை பகுதியைச் சார்ந்த ஶ்ரீனிவாசன் என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கௌரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசிடம் தஞ்சம் புகுந்தனர்.

இதேபோல் நாமக்கல் ராசிபுரம் அருகே ஆண்டலூர்கேட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷனியின் காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வர கிருஷ்ணமூர்த்தி மாற்று சமூகத்தைச் சார்ந்தவர் எனக்கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தியுடன் பேசக்கூடாது எனவும் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த 15ஆம் தேதி பிரியதர்ஷினி வீட்டை விட்டு வெளியேறி இன்று கிருஷ்ணமூர்த்தியுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தினால் கோபமடைந்த பிரியதர்ஷினியின் பெற்றோர்கள் தன்னையும் தனது கணவரையும் தாக்க நேரிடும் எனவும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி மாவட்ட கண்காணிப்பாளர் அருளரசுவிடம் தஞ்சம் புகுந்தனர். மேலும் அவர்கள் புகார் மனுவை அளித்தனர். இருவரது மனுக்களை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

தற்போது நாமக்கல் மாவட்டத்தில் காதல் ஜோடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது. இதேபோல் இரு தினங்களுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மேலும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கோரி நான்கு காதல் ஜோடிகள் தஞ்சம் புகுந்த சம்பவம் அரங்கேறியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.