மயிலாடுதுறை: பெரம்பூர் காவல் சரகத்துக்கு உள்பட்ட ஊருகுடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முரளி (26). இவருக்கும் இவரது எதிர்வீட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஜெகதீசன் என்கிற தேவதாஸ் (30) என்பவருக்கும் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தேவதாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை குத்தியதில் படுகாயமடைந்த முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக பெரம்பூர் காவல் துறையிர் வழக்குப்பதிவு செய்து தேவதாஸை கைது செய்தனர்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பில் அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி வழக்கில் 21 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவில், தேவதாஸுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பன்னீர்செல்வம் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட பெண் - போலீஸ் விசாரணை