ETV Bharat / state

புழல் சிறையிலிருந்து டாஸ்மாக் ஊழியரை மிரட்டிய கைதி

நாகப்பட்டினம்: புழல் சிறையிலிருந்து செல்போனில் தொடர்புக்கொண்டு டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டிய கபிரியேல்
டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டிய கபிரியேல்
author img

By

Published : Feb 8, 2020, 12:32 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக இருப்பவர் ரமேஷ்குமார்.

இவரிடம் சிவநேசன் (42) என்பவர், கபிரியேல் தங்களிடம் பேசவேண்டும் எனக் கூறினார் என்று செல்போனை ரமேஷிடம் கொடுத்துள்ளார்.

செல்போனில் பேசிய கபிரியேல், “ரூ.25 ஆயிரம் பணம் கொடுக்கவேண்டும் இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவோம்” என மிரட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரமேஷ்குமார், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதேபோல், மயிலாடுதுறை புதுபேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்வையாளராக இருக்கும் சந்திரவேல் (45) என்பவரையும் மிரட்டி இந்தக் கும்பல் ரூ.20 ஆயிரம் பணம் பறித்துள்ளது.

இவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இருபுகாரின் அடிப்படையில் காவலர்கள் சிறையிலுள்ள கபிரியேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அவரின் கூட்டாளியான சிவநேசன், செல்வம் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான விஜயை தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டிய கபிரியேல்

கைதி கபிரியேல் சென்னை புழல்சிறையிலிருந்து செல்போனில் தொடர்புக்கொண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் மயிலாடுதுறை வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சரவணா ஸ்டோர்ஸில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர் தொழில் செய்ய தடை

Intro:மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் போனில் பணம்கேட்டு மிரட்டியதாக புழல்சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதி பிரபல ரவுடி கபிரியேல் மீது வழக்கு.Body:மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் போனில் பணம்கேட்டு மிரட்டியதாக புழல்சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதி பிரபல ரவுடி கபிரியேல் மீது வழக்கு.

நெடுஞ்சாலை அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு ஒரு மதுக்கடைகள் கூட இன்றி மது இல்லா நகராக மயிலாடுதுறை விளங்கியது. பின்னாளில் நீதிமன்ற உத்தரவை தளர்த்திக் கொண்டது. அதனையடுத்து, மயிலாடுதுறை நகரில் தற்போது பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் மாமூல் வசூலிக்கும் பழக்கமும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் , சென்னை புழல்சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதியான பிரபல ரவுடி கபிரியேல், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிம் போனில் தொடர்பு கொண்டு பணம்கேட்டு மிரட்டியதாக மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக இருக்கும் ரமேஷ்குமார் என்பரிடம் சிவநேசன்(42) என்பவர் கபிரியேல் பேசுகிறார் என்று போனை கொடுத்து ரூ. 25 ஆயிரம் பணம்கொடுக்க வேண்டும் இல்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என்று கபிரியேல் மிரட்டியுள்ளார். இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரமேஷ்குமார் மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவந்த நிலையில் மயிலாடுதுறை, புதுபஸ்ஸ்டாண்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்வையாளர் சந்திரவேல்(45) என்பவர் பணியில் இருந்தபோது கூறைநாட்டை சேர்ந்த சிவநேசன்(42), ஈ.வெ.ரா.தெருவை சேர்ந்த செல்வம்(32),ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த விஜய் ஆகியோர் கடைக்கு சென்று கபிரியேல் 30 ஆயிரம் பணம்வாங்கி வரச்சொன்னார் என்று கேட்டுள்ளனர். அவர் பணம்கொடுக்க மறுக்கவே உடன் கத்தியைகாட்டி மிரட்டி மேற்பார்வையாளரிடம் இருந்த ரூபாய் 20 ஆயிரம் பணத்தை பறித்துகொண்டு சென்றுள்ளனர். இது குறித்து சந்திரவேல் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சிவநேசன், செல்வம், விஜய், கபிரியேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிவநேசன், செல்வம் இருவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான விஜயை தேடி வருகின்றனர்.

ரவுடி கபிரியேல் சென்னை புழல்சிறையில் இருக்கும் சூழலில் சிறையில் இருந்து போனில் மிரட்டல் விடுத்து மாமூல் கேட்கும் சம்பவம் மயிலாடுதுறை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிற்கு நான்கைந்து வழக்குகள் பல்வேறு பிரிவுகளில் ரவுடி கபிரியேல் மீது போடுவது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.