ETV Bharat / state

வாழ்த்து கடிதங்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயி - nagai farmergives life to the post cards

நாகப்பட்டினம்: வலிவலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 43 ஆண்டுகளாக தனது உறவினர்கள், நண்பர்களுக்கு கடிதங்கள் எழுதியும், பண்டிகையின்போது வாழ்த்துகளும் அனுப்பிவருகிறார்.

வாழ்த்து கடிதங்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயி
வாழ்த்து கடிதங்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயி
author img

By

Published : Jan 13, 2020, 7:47 PM IST

சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தங்களது பாசம், வேதனை, மகிழ்ச்சி ஆகியவற்றை கடிதங்கள் மூலம் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு எழுதி வெளிப்படுத்தினர். அப்போதெல்லாம் பலரும் தபால்காரருக்காக வீட்டின் முன்பு காத்திருந்த சூழ்நிலை எல்லாம் இருந்தது. பலரும் கடிதங்களை இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்துவருகின்றனர்.

தற்போது, இ-மெயில், வாட்ஸ் ஆப், பேஸ்புக், ஹைக், டெலிகிராம் போன்ற செயலிகள் வந்ததால், தற்போதைய இளைய சமுதாயத்திடம் கடிதம் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்துள்ளது. பொதுமக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், பல பகுதியில் உள்ள தபால் பெட்டிகள் பராமரிப்பின்றி வீணாகி வருவதையும் நாம் கண்கூடாக காண முடிகிறது.

வாழ்த்து கடிதங்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயி

கடிதங்கள் மூலமாக தகவல் பரிமாற்றம் என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அதற்கு மாறாக 43 ஆண்டுகளாக கடிதங்கள் எழுதியும், கடிதங்களில் வாழ்த்துக்கள் அனுப்பியும், நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா வலிவலத்தைச் சேர்ந்த காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சேரன் இருக்கிறார். சுமார் நூறு கடிதங்களை அனுப்பிவந்த இவர் தற்போது ஆயிரத்திற்கும்மேல் கடிதங்களை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பிவருகிறார். இச்செயலானது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. .

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரிப்பு

Intro:வாழ்த்து கடிதங்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயி - 43 ஆண்டுகளாக தொடரும் பணி.
Body:வாழ்த்து கடிதங்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயி - 43 ஆண்டுகளாக தொடரும் பணி.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள வலிவலத்தை சேர்ந்த ஒருவர் சுமார் 43 ஆண்டுகளாக புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து கடிதங்களை எழுதி அழிந்து வரும் கடிதங்களுக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார்.

நமது முன்னோர்கள் தங்களது பாசம், வேதனை, மகிழ்ச்சி ஆகியவற்றை வெளியூர்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் வெளிப்படுத்த ஒரு முக்கிய கருவியாக விளங்கியது கடிதங்கள் தான்.கடிதங்களை எடுத்து வரும் போஸ்ட்மேனுக்காக பலரும் வீட்டின் முன்பு காத்திருந்த சூழலும் நிலவியது. பலரும் கடிதங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். நவீன நாகரிக மாற்றங்கள் பல ஏற்பட்டாலும், முன்னோர்களை தொடர்ந்து, இளைய சமுதாயம் பின்பற்றி வந்தது. ஆனால் தற்போது, மொபைல், இ-மெயில், வாட்ஸ் அப், பேஸ்புக், ஹைக், டெலிகிராம் போன்றவை வந்ததால், தற்போதைய இளைய சமுதாயத்திடம் கடிதம் எழுதும் பழக்கம் மிக குறைந்துள்ளது. இளைய சமுதாயத்திடம் இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பல பகுதியில் உள்ள தபால் பெட்டிகள் பராமரிப்பின்றி வீணாகி வருவதையும் நாம் கண்கூடாக காண முடிகிறது. .
பொதுவாக கடிதம் மூலமாக தகவல் பரிமாற்றம் என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் , அதற்கு மாறாக 43 ஆண்டுகளாக தற்பொழுது வரை கடிதம் மூலம் வாழ்த்து அனுப்புபவர் தான் நாகை மாவட்டம் திருக்குவளை தாலுக்கா வலிவலத்தைச் சேர்ந்த காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மு. சேரன். சுமார் நூறு வாழ்த்து மடலில் தொடங்கிய இவரது பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் செயலானது தற்பொழுது ஆயிரம் வாழ்த்து அட்டை அனுப்பும் செயலாக நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. பாமர விவசாயிகள் தொடங்கி பலதரப்பட்ட கும் கிராமங்களுக்கும் இவரது வாழ்த்துக் கடிதம் சென்றடைகிறது ‌. கடிதங்களை பலர் மறந்து வரும் இந்நிலையில் இவர் போன்ற ஒரு சிலரின் இச்செயலானது வாழ்த்து அட்டைகளுக்கு உயிர் கொடுக்கும் உன்னத பணியாக விளங்குகிறது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.