நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிளை சிறையில் உள்ள கைதிகளுக்கு, நகராட்சி மற்றும் மருத்துவத் துறை சார்பில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது, கிளைச் சிறை கண்காணிப்பாளர் தேவதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி நகர்நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவத் துறை அலுவலர்கள் பங்கேற்று கைதிகளுக்கு கை கழுவும் முறை குறித்தும், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து கரோனா வைரஸை விரட்டுவோம், சுகாதாரத்தை பேணி காப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர். பின்னர், நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளை நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: விரைவில் வருகிறது கடற்படையில் பெண்களுக்கான ஆணையம்!