ETV Bharat / state

கருணாநிதியால் உருவாக்கப்பட்ட பூம்புகார் சுற்றுலா தலத்தின் நிலைமை கவலையளிக்கிறது... புலம்பிய டிஆர்பி ராஜா - Legislative Evaluation Committee Chairman TRP Raja

நீண்ட காலமாக மூடிக்கிடக்கும் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை வெளிநாடுகளில் இருப்பதுபோல் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு விரைவில் செயல்பட்டிற்கு வரும் என மயிலாடுதுறையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்

டிஆர்பி ராஜா
டிஆர்பி ராஜா
author img

By

Published : Aug 17, 2022, 5:39 PM IST

மயிலாடுதுறையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் டிஆர்பி ராஜா இன்று (ஆக.16) பாதாள சாக்கடை, மூவலூர் பாலம், கீழமூவர்கரை பாலம், எருக்கூர் நவீன அரிசி ஆலை, பூம்புகார் சிற்பக்கலைக்கூடம், தரங்கம்பாடி கோட்டை, தரங்கம்பாடி கடல் அரிப்புப்பகுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.

பின்னர், ஏவிசி கல்லூரியில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சட்டப்பேரவை கூடுதல் செயலர் சுப்பிரமணியம், மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறையில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு
மயிலாடுதுறையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்பி ராஜா, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலங்களை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மயிலாடுதுறை புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு, விரைவில் புறவழிச்சாலை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

குறிப்பாக, தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மறுசீரமைக்கப்பட்டு வெளிநாடுகளில் உள்ளதுபோல் சர்க்கரையுடன் சேர்த்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் இடமாகவும் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலையைத் தற்காலிக தானியக் கிடங்காக அரசு பயன்படுத்திக்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது; எனவே, ஆலை இயக்கப்படாதோ என விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

மேலும் எருக்கூர் தானிய சேமிப்பு கிடங்கு வடிவமைப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமை உள்ளது. மேலும், ரூ.12 கோடி செலவில் குறைபாடுகள் களையப்பட்டு விரைவில் புழக்கத்திற்கு வரும். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட பூம்புகார் சுற்றுலாத்தலம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றின் தற்போதைய நிலைமையைப்பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.

சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் டிஆர்பி ராஜாவின் பேட்டி

இதனை சீரமைப்பதற்கு உரிய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு வழங்கி உள்ளதாகவும் அதன் தலைவர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் திறக்கப்படும் தலைஞாயிறு சர்க்கரை ஆலை - பட்ஜெட்டில் அறிவிப்பு; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.