ETV Bharat / state

கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் நேரடி விசாரணைக்கு அனுமதி வேண்டும் - வழக்கறிஞர்கள்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முன்னறிவிப்பின்றி நேரடி வழக்கு விசாரணைகள் நிறுத்திவைக்கப்பட்டதால் வழக்கறிஞர்கள் அவதிக்குள்ளாகினர்

வழக்குரைஞர்கள் கோரிக்கை
வழக்குரைஞர்கள் கோரிக்கை
author img

By

Published : Jan 3, 2022, 6:18 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் நேரடி விசாரணை நிறுத்திவைக்கப்பட்டு காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் எனச் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் நேற்று (ஜனவரி 2) அறிவிப்பு வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது. இது பற்றி எந்த முன்னறிவிப்பும் இல்லாததால் வழக்கறிஞர்கள் பலரும் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கம்போல, தங்கள் வழக்குகளுக்காக இன்று காலை முதல் வந்துசேர்ந்தனர்.

மீண்டும் நேரடி விசாரணைக்கு கோரிக்கை

இந்நிலையில் அவர்களிடம், வழக்குகள் விசாரணை காணொலி மூலமாக மட்டுமே நடத்தப்படும் என்று நீதிமன்ற ஊழியர்கள் கூறினர். மேலும், வழக்கறிஞர்கள் பெயர், அவர்கள் நடத்தும் வழக்கு விசாரணை குறித்த விவரங்களைக் குறித்துக் கொண்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் நீதிமன்ற நேரடி விசாரணை நிறுத்தப்பட்டதால் வழக்கறிஞர்கள், விசாரணைகளுக்காக வந்தவர்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் வேலு குபேந்திரன் தலைமைப் பதிவாளருக்குக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு அனுமதிக்கக் கோரிக்கை

இதையும் படிங்க: Sivakasi fire accident CM relief fund: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.