நாகை மாவட்டம் வாஞ்சூர் சோதனை சாவடியில், இன்று மதுவிலக்கு காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு காரை சோதனை செய்வதற்காக வழிமறித்தனர்.
அந்தக் கார் காவலர்களை கண்டதும், நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் அக்காரை காவலர்கள் மடக்கி பிடித்தனர்.
அதில், காரைக்காலிலிருந்து கடத்தி வந்த 32 அட்டை பெட்டிகளில் இருந்த 1632 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, திருப்பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த பால சுப்ரமணியத்தை மதுவிலக்கு காவலர்கள் கைது செய்தனர். மேலும், விசாரணையில் மதுபானங்கள் தமிழ்நாட்டில் திருத்துறைப்பூண்டிக்கு விற்பனைக்காக கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.