ETV Bharat / state

மனைவி தற்கொலை செய்த விவகாரம் - கணவரிடன் போலீசார் விசாரணை

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே பொறையாறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவரை கைது செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

lady-death-issue-police-ivestigates-her-husband

author img

By

Published : Sep 6, 2020, 8:03 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (39). இவர் தரங்கம்பாடியில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே வேல்முருகனுக்கு அவரது மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததாக காயத்ரி தனது பெற்றோர்களிடம் கூறினார். அதுமட்டுமின்றி வேல்முருகனுக்கு போதை ஊசி செலுத்தும் பழக்கம் இருந்ததன் காரணமாக அவர் மனோதத்துவ ரீதியில் நலமில்லாமல் காயத்ரியை கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் தம்பதியினருக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு பலமுறை கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று வந்த காயத்ரி, இரண்டாவது மகன் பிறந்த சில மாதங்களில் கணவனிடம் கோபித்துக்கொண்டு நிரந்தரமாக தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி குடவாசலில் உள்ள காயத்ரியின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், காயத்ரியை சமாதானம் செய்து பொறையாரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 5) காயத்ரி தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பொறையார் காவல் துறையினர் காயத்ரியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையறிந்த வந்த காயத்ரியின் உறவினர்கள், அவரது மரணத்தில் வேல்முருகன், தாய் ராஜலட்சுமி மற்றும் இரு சகோதரிகள் மீது சந்தேகம் இருப்பதாக பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பொறையார் காவலர்கள் வேல்முருகனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்ரியின் மரணத்தால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சிலர், வேல்முருகனின் தாய் ராஜலட்சுமி வசித்துவந்த கூரை வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் வீட்டில் வைத்திருந்த டிவி, பீரோ உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் குறித்து பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் வழக்குப்பதிவு செய்துள்ளார். திருமணமாகி இன்னும் ஏழு ஆண்டுகள் நிறைவடையாததால் மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் கணவன் கொலை - மனைவியும் அவர் கூட்டாளியும் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.