ETV Bharat / state

குடிநீர் கேட்டு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்? எங்க தெரியுமா? - mayiladuthurai news

Kottur councillors protest: மயிலாடுதுறையில் உள்ள குடிநீர் நீரூந்து நிலையத்தில், கோட்டூர் பேரூராட்சியின் 17 வார்டுகளின் கவுன்சிலர்கள் 30 ஆயிரம் மக்களின் குரலாக குடிநீர் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுன்சிலர்கள் குடிநீர் நீரூந்து நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 9:50 AM IST

கவுன்சிலர்கள் குடிநீர் நீரூந்து நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்

மயிலாடுதுறை: கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி பகுதியில், 21 வார்டுகள் உள்ளன. அந்த 21 வார்டுகளிலும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, பொங்காளியூர் அருகே மயிலாடுதுறையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரூந்து நிலையத்தில் இருந்து குடிநீர் தரப்பட்டு வருகிறது.

மேலும் இதற்காக, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கோட்டூர் பேரூராட்சி சார்பில் மாதம் தோறும் எட்டு லட்ச ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டில் 13 கோடியே 19 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வேட்டைக்காரன் புதூர், கோட்டூர் உடையகுளம் பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தில், தினசரி கோட்டூர் பேரூராட்சிக்கு 18 லட்சம் லிட்டர் தண்ணீர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் வழங்கப்பட வேண்டும். இதற்காக பேரூராட்சி மாதம் தோறும் 8 லட்ச ரூபாய் குடிநீர் வாரியத்திற்கு செலுத்தி வருகிறது. ஆழியாறு ஆற்றில், மயிலாடுதுறை பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரூந்து நிலையத்தில் 50 எச்.பி மோட்டார் பம்புகள் வைத்து கோட்டூர் பேரூராட்சி மற்றும் 38 வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு மோட்டார் பம்ப் பழுதடைந்த நிலையில், மாற்று மோட்டார் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒப்பந்ததாரர் பழுதை சரி செய்து வைக்காத நிலையில் உபயோகத்தில் இருந்த மற்றொரு மோட்டாரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பழுதடைந்ததாக கூறப்படுகிறது.

எனவே, பேரூராட்சிக்கு தினசரி வழங்க வேண்டிய 18 லட்சம் லிட்டர் குடிநீர் தற்போது வழங்கப்படாமல், பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த இரு நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குடிநீர் விநியோகத்தில் நிலவும் குளறுபடிகளை கண்டறிய, கோட்டூர் பேரூராட்சியின் 17 வார்டு கவுன்சிலர் தலைமையில் மயிலாடுதுறையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரூந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது இரு மோட்டர்களும் பழுதடைந்து இருந்தது தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கோபமுற்ற பொது மக்கள், உடனடியாக மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்து தர வேண்டும் எனக் கோரி குடிநீர் நீரூந்து நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் காவல் துறையினர் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இரு தினங்களில் மோட்டார் சரி செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்தனர். இருப்பினும் பொது மக்கள் குடிநீர் விநியோகம் செய்யும் வரை அங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் பலி.. 10 பேர் படுகாயம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.