மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப்பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை பக்தியில் ஆழ்த்தும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.
கோனேரிராஜபுரம் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம்! - Nagai News
மயிலாடுதுறை: திருவாதிரை திருநாளை முன்னிட்டு குத்தாலம் அருகேயுள்ள பிரசித்திப்பெற்ற கோனேரிராஜபுரம் அருள்மிகு நடராஜப் பெருமனுக்கு சிறப்புத் திருமுழுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
![கோனேரிராஜபுரம் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம்! ஆருத்ரா தரிசனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10053507-thumbnail-3x2-temple.jpg?imwidth=3840)
ஆருத்ரா தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப்பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை பக்தியில் ஆழ்த்தும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.
கோனேரிராஜபுரம் அருள்மிகு நடராஜபெருமானுக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது
இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜப் பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ திருமுழுக்கு நடைபெற்றது.
பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு யாக சாலையிலிருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மகா தீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.