சீர்காழி: தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதியில் கடைசி நாளான காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, காலை முதல் மக்கள் கடற்கரை, கோயில் என குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக காணும் பொங்கலை கொண்டாடி வருவது வழக்கம்.
கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக, வார இறுதிநாட்களுக்கு பொதுமக்கள் வெளியே செல்லத் தடையுள்ளது. தற்போது வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைக்கு செல்லகூட தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. இதனால் பலர் வீடுகளில் முடங்கினர்.
இதை மடைமாற்றும்விதமாக பெண்களின் திறமையை வெளிப்படுத்தும்விதமாக தென்பாதி வ.ஊ.சி தெற்குத்தெருவில் கோலப்போட்டி நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ரங்கோலி, பூக்கோலம் உள்ளிட்ட வண்ணமயமான கோலங்கள் வரைந்து அசத்தினர்.
சிறந்த கோலத்திற்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:Sunday Lockdown: மயிலாடுதுறையில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!