கார்த்திகை தீபத் திருநாள் நாளை (நவ. 29) கொண்டாடப்படவுள்ளது. இந்நாளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அவல் பொரியை சாமி முன்பு வைத்து வழிபடுவது வழக்கம்.
மயிலாடுதுறை காந்திஜி சாலை, துலாக்கட்டம் ஆகிய பகுதிகளில் கார்த்திகை தீபத் திருநாளுக்காக அவல் பொரி வாங்க அதிக அளவில் மக்கள் கூடுவர்.
இந்த ஆண்டு இப்பகுதிகளில் மழையின் காரணமாக பொதுமக்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. இதனால் அவல் பொரி வியாபாரம் குறைந்துள்ளது. மயிலாடுதுறையில் ஒரு கிலோ பொரி 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்!