காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், "கரோனா வைரஸ் தாக்கம், கடந்த எட்டு மாதங்களாக உலகையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இந்நிலையில், அரசின் முழு முடக்கத்தில் பல்வேறு கட்ட தளர்வுகளை அளித்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால், கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இதனால், வர்த்தகர்களும், பொதுமக்களும் கண்டிப்பாக 'SMS' ஐ (Social Distancing, Masking, Sanitizing) அதாவது தகுந்த இடைவெளி, முகக் கவசம் அணிதல், கையை சுத்தம் செய்வதைக் கடைபிடிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிஹாரிகா பட் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் புதுச்சேரியில் போக்குவரத்து காவல் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்தார். அதன்பின், புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனி குமார் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவலர் வீரவணக்க நாள்: நினைவுருவ கற்சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்!