புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தற்போது ஏற்பட்டுள்ள புரெவி புயல் காரணமாக நேற்றுமுதல் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளமான பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, காரைக்காலில் உள்ள தாழ்வான பகுதிகள், மீனவ கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் முகத்துவாரங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இதேபோன்று மண்டபத்தூர், கிளிஞ்சல்மேடு, அக்கம் பேட்டை, காளிக்குப்பம், திருவேட்டக்குடி ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளைச் சரிசெய்யுமாறு காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.