ETV Bharat / state

மயிலாடுதுறையை தனிமாவட்டமாக்க வேண்டும்- எம்.ஹெச்.ஜவாஹிருல்லா

நாகப்பட்டினம்: முத்தலாக் சட்டத்தை ஆதரித்து மக்களவையில் ரவீந்திரநாத் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
author img

By

Published : Jul 28, 2019, 11:55 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை, ஒரே தேர்தல் என்ற பாணியில் இந்தியா முழுவதற்கும் ஒரே காவல்துறை தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள திருத்தம் தான் தேசிய பாதுகாப்பு முகமை.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா

இதன்பின்னர், கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறையை தமிழ்நாடு அரசு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் முத்தலாக் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, மோடி அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் ஆதரித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

Intro:மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும், சிறுபான்மையினரை கைது செய்து சிறையில் அடைக்கும் நோக்கத்தோடு மோடி அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது கண்டிக்கத்தக்கது: மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா பேட்டி:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கூறியது: காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு ஹைட்ரோகார்பன் எடுக்க புதிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விளைநிலங்களில் காவல்துறையினரின் பாதுகாப்போடு, கெயில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையை சுடுகாடாக ஆக்கக்கூடிய முயற்சியாகும். ஆகஸ்ட் 18-ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற உள்ள மீத்தேன்; எதிர்ப்பு திட்டக் கூட்டமைப்பின் மாநாட்டிலே ம.ம.க மற்றும் தமுமுக நிர்வாகிகள் பெருந்திரளான பங்கேற்கும். தமிழகத்தில் சில வாரங்களாக தேசிய புலனாய்வு முகமை செய்துவரும் கைதுகள் மற்றும் பரப்பி வரும் செய்திகள் ஆகியன, அமைதியாக இருக்கக் கூடிய தமிழகத்தில், மக்கள் மத்தியில் பீதியை கிளப்பக் கூடியதாக உள்ளது. மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை, ஒரே தேர்தல் என்ற பாணியில் இந்தியா முழுவதற்கும் ஒரே காவல்துறை தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து இருக்கக்கூடிய திருத்தம் தான் தேசிய பாதுகாப்பு முகமை. மயிலாடுதுறையை மாவட்டத் தலைநகராக அறிவிக்க நீண்ட நெடிய காலமாக மயிலாடுதுறை பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை உள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறையை மக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று, புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும். வழக்கொழிந்த சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் பாடநூலில் தமிழை விட பல ஆண்டுகாலம் தொன்மையான மொழி என்று சமஸ்கிருதத்தை சொல்லியிருப்பது ஆதாரமற்றது. சமீபத்தில் கீழடியில் கிடைத்த அகழ்வாய்வுச் புறம்பான ஒரு முடிவாக இருக்கின்றது. உடனடியாக தமிழக அரசு இது குறித்து வருத்தம் தெரிவித்து அந்த பாடங்களை திரும்பப் பெற வேண்டும். ஆந்திர அரசு பாலாற்று அணையின் உயரத்தை உயர்த்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். இதை தடுப்பதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த முறை முத்தலாக் சட்டத்தை கடுமையாக எதிர்த்த அதிமுக, மீண்டும் மோடி பிரதமராக வந்த பின்பு, சிறுபான்மையினரை முத்தலாக் என்ற பெயரில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற சட்டத்தை அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் ஆதரித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

பேட்டி: ஜவாஹிருல்லா (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.