காரைக்கால் மாவட்ட புதிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக நிஹாரிகா பட் பொறுப்பேற்ற நாள்முதல் காரைக்கால் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் தொடர்பாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் காவல் நிலையங்களில் சென்று பலரும் புகார் அளிக்கத் தயங்குவதன் காரணத்தால் பல குற்றச்சம்பவங்களும், செயல்களும் வெளியில் தெரியாமல் பல குற்றவாளிகள் தண்டனையின்றி தப்பிவிடுகின்றனர். குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
இதனைக் கருத்தில்கொண்டு இணைய வழியில் குற்றங்கள் குறித்து புகாரளிக்கும் ஆன்லைன் கம்ப்ளைன்ட் பாக்ஸ் என்ற இணையவழிப் புகார் பெட்டியினை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த இணையதள புகார் பெட்டியில் புகார்களைத் தெரிவிக்கும் நபர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண் போன்ற விவரங்களைக் கொடுப்பது அவசியம் இல்லை என்றும், புகார் கொடுக்கும் நபர் விரும்பினால் மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பதிவாகும் புகார்களை உரிய காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யத்தில் ‘மய்யம் மாதர் படை’!