மயிலாடுதுறையில் இந்து மகாசபா அமைப்பின் சார்பில் மாநில செயலாளர் ராம. நிரஞ்சன் தலைமையில் இந்து அரசியல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “இந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் வருகிற 27ஆம் தேதி சென்னையில் அனைத்து இந்து இயக்கங்கள் இணைந்து இந்து மகாசபா அமைப்பின் சார்பில் இந்து அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடத்த உள்ளது.
தமிழ்நாடு இருமொழிக் கொள்கை சிந்தனையை மாற்றி மும்மொழி கொள்கைக்கு மாற வேண்டும், இந்தியை அரசுப் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும், நவோதயா பள்ளிகள் தொடங்க வழிவிட வேண்டும். அனைத்து மதத்தினருக்கும் கிடைப்பது போன்று இந்துக்களுக்கும் கல்வியில் உதவித்தொகை, ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.
மேலும், “நபிகள் நாயகத்தைப் பற்றிய அவதூறாகப் பேசுவது தவறு என்றும் இஸ்லாமோ, கிறிஸ்தவமோ எந்த மதத்தையும் அவதூராக பேசுவது தவறு என்று கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையும் படிங்க:சுமதிநாத் பகவான் கோவில் கட்டும் வழக்கு: இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!